என் மலர்
இந்தியா

ஹைதராபாத்: தீப்பொறி பறக்க பைக்கை இழுத்துச் சென்ற லாரி வீடியோ வைரலானது
- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது. இதனால் பைக் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்தது. உடனே பைக் ஒட்டி வந்த நபர் லாரி மீது ஏறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாது ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அன்றைய தினம் இதே லாரி மற்றொரு விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
Next Story






