என் மலர்tooltip icon

    இந்தியா

    சசி தரூர், ஓவைசியை பாராட்டிய அசாம் முதல்வர்: ராகுல் காந்தி நாட்டிற்கு துரோகம் இழைத்ததாக குற்றச்சாட்டு
    X

    சசி தரூர், ஓவைசியை பாராட்டிய அசாம் முதல்வர்: ராகுல் காந்தி நாட்டிற்கு துரோகம் இழைத்ததாக குற்றச்சாட்டு

    • சண்டை நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் இழப்புகளைப் பற்றி ராகுல் காந்தி கேட்டார்.
    • எனினும், பாகிஸ்தான் இழப்பு குறித்து கேட்கவே இல்லை.

    பஹல்தாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக அசாம் மாநில சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மனம் மீதான விவாதத்தின்போது அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசினார்.

    அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-

    வெளிநாட்டில் மண்ணில் இந்தியாவை மிகவும் தீர்க்கமாக நியாயப்படுத்திய காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக சசி தரூர் இந்திய நிலையை வலுவாக நியாயப்படுத்தினார். அவர் மட்டுமல்ல, அசாதுதீன் ஓவைசி, சுப்ரியா சுலோ போன்ற பிரதிநிதிகளும் இந்தியாவின் நிலையை நியாப்படுத்தினர்.

    அவர்கள் அனைவரும் இந்தியாவுக்காக நின்றனர். ஆனால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வாறு நிற்கவில்லை. அவர் நாட்டிற்கு துரோகம் இழைத்துவிட்டார். அவர் இந்தியப் படைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.

    ராணுவ மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி கேட்பது வேறு விஷயம். ஆனால் அது நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் இழப்புகளைப் பற்றி அவர் கேட்டார். எனினும், பாகிஸ்தான் இழப்பு குறித்து கேட்கவே இல்லை.

    இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூற, எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை 33 நாடுகளுக்கு இந்திய அரசு அனுப்பி வைத்தது.

    Next Story
    ×