என் மலர்
இந்தியா

சாலை விபத்தில் காயமடைவோருக்கு இனி இலவச சிகிச்சை- மத்திய அரசு அறிவிப்பு
- ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்கப்பட்டது.
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இது தொடர்பான அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை நேற்று (மே 5) முதல் பின்பற்றப்படுகிறது.
விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் ஆவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச சிகிச்சை திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் 'நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தில் இலவச சிகிச்சை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






