என் மலர்
இந்தியா

குழம்புல மட்டன் பீஸ் எங்கடா?.. பா.ஜ.க. எம்.பி. கொடுத்த அசைவ விருந்தில் அடித்துக்கொண்ட மக்கள்
- பாஜக எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
- இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பாஜகவின் பதோஹி தொகுதி எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நவம்பர் 14 இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.
அப்போது மட்டன் குழம்பில் ஆட்டுக்கறி இல்லாததால் கோவமான இளைஞர் ஒருவர் உணவு பரிமாறிய நபரிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி இரண்டு தரப்பினர் சண்டையிட்டு கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






