என் மலர்
இந்தியா

தலைக்கு ரூ.1 கோடி விலை கொண்ட தலைவர் உட்பட 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
- சுமார் 1,500 வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்
- அனல் தா என்கிற பதிராம் மாஜி தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 15 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சரண்டா காட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிஆர்பிஎஃப் கோப்ரா படையைச் சேர்ந்த சுமார் 1,500 வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் கும்டி என்ற பகுதியில் நேற்று துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவராணா அனல் தா என்கிற பதிராம் மாஜி என்பவரும் அடங்குவார். அனல் தா தலைக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது
அவருடன் சேர்த்து உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Next Story






