search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் பத்திரங்கள் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்: திரவுபதி முர்முவுக்கு பார் கவுன்சில் கடிதம்
    X

    தேர்தல் பத்திரங்கள் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்: திரவுபதி முர்முவுக்கு பார் கவுன்சில் கடிதம்

    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்க கூடாது
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது

    பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்க கூடாது எனவும், வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தக் கோரி கடிதம் மூலம் ஆதிஷ் அகர்வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அக்கடிதத்தில், "இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×