என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஈ சாலா கப் நமதே!.. விராட் கோலி அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி - சித்தராமையா புகழாரம்
- ஆர்சிபி வீரர்கள் இன்று மில்லியன் கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்கினர்
- இது ஒரு வரலாறு படைக்கும் நாள் என்று பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஐ.பி.எல். போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள்.
கனவு கடைசியில் நனவாகி உள்ளது. ஈ சாலா கப் நமதே! மின்சாரம் போன்ற செயல்பாடு முதல், கலங்காத மனவுறுதி வரை, இந்த வெற்றியானது, கர்நாடகாவின் பெருமையை உயர்த்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
ஆர்சிபி வீரர்கள் இன்று மில்லியன் கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்கினர், முழு போட்டியிலும் ஒரே அணியாக செயல்பட்டனர்.
இந்த ஆர்சிபி வெற்றி விராட் கோலியின் 18 ஆண்டுகால தவம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் பலன். ஆர்சிபியின் ஒவ்வொரு வீரரும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் போன்ற அனைத்து துறைகளிலும் சாம்பியன் செயல்திறனை வழங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு வரலாறு படைக்கும் நாள் என்று பதிவிட்டுள்ளார்.






