என் மலர்
இந்தியா

வதந்திகளை நம்ப வேண்டாம்.. நலமுடன் உள்ளேன் - தீவிர சிகிச்சை என்று பரவிய தகவல் குறித்து ரத்தன் டாடா
- ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின
- வரது உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் பரவின
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா [86 வயது] ரத்த அழுத்தம் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தான் நலமுடன் உள்ளதாக ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது உடல்நிலை குறித்து பரவி வரும் செய்திகளை பற்றி கேள்விப்பட்டேன். அவை அனைத்தும் வதந்திகள்தான் என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.
எனது வயது மற்றும் உடல் உபாதைகள் காரணமாகவே மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வந்தேன். எனவே ஊடகங்கள் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story






