search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் - பா.ஜ.க.-வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.பி.
    X

    குஜராத் - பா.ஜ.க.-வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.பி.

    • ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
    • 2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.

    குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான நரன் ரத்வா பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் தனது மக்கள் ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

    ஏற்கனவே குஜராத்தில் பலவீனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பழங்குடியின தலைவரான நரன் ரத்வா தற்போது பா.ஜனதாவுக்கு சென்றிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    சோட்டோ உதேப்பூரில் பழங்குடியின தலைவரான ரத்வா ஐந்து முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். முதன்முறையாக 1989-ம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் 1991, 1996, 1998 மற்றும் 2004-ல் மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

    ரத்வாவின் மகன் 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோட்டா உதேப்பூர் பழங்குடியின தொகுதியில் (ST) போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ரத்வா ரெயில்வே துணை மந்திரியாக இருந்தவர். 2009-ல் பா.ஜனதா வேட்பாளர் ராம்சின் ரத்வாவிடம் தோல்வியடைந்தார்.

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அம்மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர். பாட்டில் தலைமையில் ரத்வான தனது ஆதரவாளர்களும் பா.ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.

    Next Story
    ×