என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் பட்ஜெட் பெண் குழந்தை போன்றது... மகனைப் பெறுவதுதான் பலன் - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து
    X

    'காங்கிரஸ் பட்ஜெட் பெண் குழந்தை போன்றது... மகனைப் பெறுவதுதான் பலன்' - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து

    • இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.
    • ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்

    ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ பகதூர் சிங் கோலி, பாஜகவின் பட்ஜெட்டை ஆண்குழந்தை என்றும், காங்கிரஸின் பட்ஜெட்டை பெண்குழந்தை என்றும் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அவையில் பேசிய அவர்,

    "எங்களது முதல் பட்ஜெட் வந்தது, ஒட்டுமொத்த ராஜஸ்தானும் அதனைப் பாராட்டியது. இரண்டாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது. மூன்றாவது பட்ஜெட்டும் வரவேற்கப்பட்டது.

    எங்கள் அரசு முதல் பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, இரண்டாவது பட்ஜெட்டில் ஒரு மகனைப் பெற்றெடுத்தது, மூன்றாவது பட்ஜெட்டிலும் ஒரு மகனைப் பெற்றெடுத்தது. இளமைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் பயனுள்ளவராக இருப்பார்.

    அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது, அவர் தனது கடைசி பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார், அதனால்தான் அது ஒரு மகனைப் பெறவில்லை; ஒரு மகள் பிறந்தாள். அதனால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள்," என்று கோலி கூறினார்.

    பெண் குழந்தையை ஒரு தோல்வியாகவும் அல்லது பலவீனமாகவும் சித்தரிக்கும் இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த பேச்சு பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக பேசியுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்வர்ணிம் சதுர்வேதி,

    "தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர், அதுவும் சட்டமன்றத்திலேயே இப்படிப் பேசுவதை கற்பனை செய்து பாருங்கள். இது அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், சிந்தனைப் போக்கையும் காட்டுகிறது. காங்கிரஸை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார்கள். இது பாலினத்திற்கு எதிரான அவர்களின் பாரபட்சமான மனநிலையைக் காட்டுகிறது, இது ஒரு பாலியல் ரீதியான (sexist) கருத்தைத் தவிர வேறில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×