என் மலர்tooltip icon

    இந்தியா

    வாகா எல்லை மூடல்- சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
    X

    வாகா எல்லை மூடல்- சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

    • மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
    • விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைதொடர்ந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார்.

    இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதேபோல், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மே 1ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.

    மேலும், விசா பெற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது.

    சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×