search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் 2024: மக்கள் நலத்திட்டங்களுக்கு 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் வழங்கியுள்ளோம்
    X

    பட்ஜெட் 2024: மக்கள் நலத்திட்டங்களுக்கு 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் வழங்கியுள்ளோம்

    • பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விவசாயிகள், ஏழைகள் என மக்கள் நலத்திட்டங்கள் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடி மானியம் சென்றடைந்துள்ளது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு நாங்கள் மிக உயரிய முன்னுரிமை அளித்து வருகிறோம். சிறந்த நிர்வாகம், திட்டங்கள் மூலம் இந்திய இளைஞர்களிடையே பணித்திறனுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் உரிய முறையில் உயர்த்தப்பட்டு வருகிறது. 4 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    கட்டமைப்பு திட்டங்கள் மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1.1 கோடி இளைஞர்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர். சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரூ.34 லட்சம் கோடி நேரடி மானியம் மூலம் ரூ.2.7 லட்சம் கோடி வீணாவது தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 3000 ஐ.டி.ஐ.க்களை ஏற்படுத்தி உள்ளோம். திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் 54 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×