என் மலர்
இந்தியா

ஆட்சி கவிழ்ப்புகளுக்கு 6300 கோடி ரூபாய் செலவு செய்த பாஜக... அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
- எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளது.
- பாஜகவின் செயலால் விலைவாசி உயர்வின் பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
புதுடெல்லி:
பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ.6,300 கோடி செலவு செய்யவில்லை என்றால், மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டியதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
டெல்லி சட்டசபையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த பணத்தை, எம்எல்ஏக்களை வாங்குவதற்காக பயன்படுத்துகிறது.
மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கும், மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் பாஜக கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளதால், விலைவாசி உயர்வின் பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அரசுகளை கவிழ்ப்பதற்காக இதுவரை ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளனர். அரசுகளை கவிழ்க்காமல் இருந்திருந்தால் கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க வேண்டியதில்லை. மக்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை.
இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.






