என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆனந்த் அம்பானி வந்தாரா விலங்குகள் கடத்தல் விவகாரம்: சிறப்பு விசாரணை குழு அமைத்த உச்சநீதிமன்றம்
    X

    ஆனந்த் அம்பானி 'வந்தாரா' விலங்குகள் கடத்தல் விவகாரம்: சிறப்பு விசாரணை குழு அமைத்த உச்சநீதிமன்றம்

    • வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
    • சிறப்பு விசாரணைக் குழுவிற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமை தாங்குவார்.

    இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 'வந்தாரா' விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையம் குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது. 2024 இல் பிரதமர் மோடி இந்த மையத்தை திறந்து வைத்தார். இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் உயிரியல் பூங்கா என கருதப்படுகிறது.

    இங்கு சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் முதலைகள் என 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உள்ளது.

    இங்குள்ள விலங்குகள் குறிப்பாக யானைகள் சட்டவிரோதமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டவை என்று பரவலாக குற்றசாட்டு எழுந்தது. விலங்குகள் நல அமைப்புகள், ஆர்வலர்கள் தரப்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில் வந்தாரா மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுகின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

    இந்நிலையில் யானைகளை சட்டவிரோதமாக சிறைபிடித்தது மற்றும் பிற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செல்லமேஸ்வர் தலைமை தாங்குவார்.

    செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் SIT தனது அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×