என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்து - விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த தந்தை
    X

    அகமதாபாத் விமான விபத்து - விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த தந்தை

    • விமான பணியை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக நண்பரிடமும் சுமீர் சபர்வால் கூறியுள்ளார்.
    • 56 வயதான கேப்டன் சபர்வால், அனுபவம் வாய்ந்த விமானி ஆவார்.

    விமானம்.... என்றால் இனம்புரியாத உணர்வு ஏற்பட்டு அதனை காணும் பழக்கம் இன்னும் பலரிடம் உள்ளது. இரவில் நிலாவைக் காட்டியும், பகலில் விமானத்தை காட்டியும் குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைகளிடம் நீ எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று கேட்டால் விமானத்தை ஓட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.

    இப்படி விமானத்தின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்ததை தாண்டி தற்போது பயம் தான் உள்ளது. இதற்கு உதாரணம் தான் அகமதாபாத் விமான விபத்து. பல கனவுகளுடன் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் பொதுமக்கள் 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் சுமீர் சபர்வாலுக்கு அவரது 88 வயதான தந்தை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரின் நெஞ்சை ரணமாக்கியது.

    விபத்து நிகழ்வதற்கு 3 நாட்களுக்கு முன்பு, தனது தந்தையை பார்த்துக்கொள்வதற்காக விமான பணியிலிருந்து விலக கேப்டன் சுமீர் சபர்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தனது தந்தை புஷ்கராஜிடம் தான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். விமான பணியை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாக நண்பரிடமும் சுமீர் சபர்வால் கூறியுள்ளார். ஆனால் அதற்குள் விமான விபத்தில் அவர் உயிரிழந்த துயர சம்பவத்தால் அவரது தந்தையால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாமலும், சுமீர் சபர்வால் நினைவால் அழுதுகொண்டே இருந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க கேப்டன் சுமீர் சபர்வாலுக்கு அவரது தந்தை அஞ்சலி செலுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

    56 வயதான கேப்டன் சபர்வால், அனுபவம் வாய்ந்த விமானி ஆவார். அவர் தனது தந்தையுடன் மும்பையின் பவாய் பகுதியில் வசித்து வந்தார். அவரது தந்தை புஷ்கராஜ், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விமான விபத்து நிகழ்ந்து 6 நாட்கள் ஆன நிலையில், அச்சம்பவத்தில் இருந்து மீள முடியாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.



    Next Story
    ×