என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம்- பிரதமர் மோடி
    X

    அகமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம்- பிரதமர் மோடி

    • அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    • ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என் இதயத்தை உடைக்கிறது.

    இந்த சோகமான நேரத்தில், விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×