என் மலர்
இந்தியா

பாராளுமன்றம், சட்டசபை என 2 தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் போட்டி
- கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.
- பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பதி:
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ஜ.க.வும் இணையும் என்று உறுதியான தகவல்கள் கூறுகின்றன.
சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைப்படி நடிகர் பவன் கல்யாண் வரும் தேர்தலில் பிதாபுரம் சட்ட சபை தொகுதியிலும், அனக்கா பள்ளி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
கடந்த 2019 தேர்தலின் போது பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜ்வாகா என 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது இரண்டிலும் தோல்வியடைந்தார். பவன் கல்யாண் இந்த முறை ஒரு சட்டசபை, ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன்கல்யாண் டெல்லி சென்றனர். இன்று பா.ஜ.க மேலிட தலைவர்களுடன் அவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






