என் மலர்
இந்தியா

பரோலில் வந்த கைதியை பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற கும்பல் - வீடியோ வைரல்
- 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
- முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.
பீகாரில் பரோல் கைதி ஒருவரை மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று சுட்டுக்கொலை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிகார் மாநிலம் பாட்னாவில் கொலைக் குற்றவாளியாக பரோலில் வெளியே வந்த சந்தன் என்பவர் நேற்று, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
காயமடைந்த சந்தன் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Next Story






