என் மலர்tooltip icon

    இந்தியா

    மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இன்றி மனைவியை சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து 600 கி.மீ பயணித்த 70 வயது முதியவர்
    X

    மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இன்றி மனைவியை சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து 600 கி.மீ பயணித்த 70 வயது முதியவர்

    • சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.
    • என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்.

    ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்துள்ளார்.

    எனவே தனது மனைவியை ஒரு சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.

    தனது கிராமத்திலிருந்து கட்டாக் சென்று, மீண்டும் அங்கிருந்து வீடு திரும்பியது என மொத்தம் 600 கி.மீ தூரத்தை அவர் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கடந்துள்ளார்.

    "என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். அதனால் தான் நான் ரிக்ஷாவிலேயே அவரை அழைத்துச் சென்றேன்." என்று அம்முதியவர் இதுகுறித்து பதில் அளித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது. இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    Next Story
    ×