என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் கடந்த 4 மாதங்களில் 979 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு
    X

    கர்நாடகாவில் கடந்த 4 மாதங்களில் 979 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு

    • கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாத இறுதி வரை மாநிலத்தில் 979 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது.
    • அதே நேரத்தில் 390 போக்சோ மற்றும் பிற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாத இறுதி வரையிலான முக்கிய குற்ற வழக்குகளின் புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளது. இதில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாத இறுதி வரை மாநிலத்தில் 979 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளளது.

    அதே நேரத்தில் 390 போக்சோ மற்றும் பிற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூரு நகரில் 114 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். போக்சோ வழக்குகளில் பெங்களூரு நகரம் முதலிடத்தில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் விஜயநகர் மாவட்டத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

    அதே போல் கடந்த 4 மாதங்களில் 1126 கலவரங்கள் நடந்துள்ளன. இதில் 426 கொலை வழக்குகள், 1165 கொலை முயற்சி, 317 பாலியல் வன்கொடுமைகள் (போக்சோவை தவிர) 47 திருட்டுகள், 192 கொள்ளைகள்,339 பகல்நேர திருட்டுகள், 1233 இரவு திருட்டுகள், 207 ஏமாற்றுதல், 5612 தாக்குதல்கள், 1940 துன்புறுத்தல்கள், 5236 சூதாட்டம் மற்றும் 4846 சைபர் மோசடிகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    Next Story
    ×