என் மலர்
இந்தியா

ஆபரேசன் சிந்தூர்: ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியீடு
- மே 7 மாதம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- இந்த தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து மே 7 மாதம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இந்த தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய ராணுவத்தால் மே 7ல் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள்:
1. முடாசர் காதியன் காஸ் என்கிற அபு ஜுண்டால் - லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் - முடாசர் காதியன் இறுதிச்சடங்கில்தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்று மரியாதை செய்தனர்
2. ஹபீஸ் முகமது ஜமீல் - ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் - நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து சேர்ப்பது உள்ளிட்டவை ஜமீலின் முக்கிய பணியாகும்.
3. முகமது யூசுப் அசார் (எ) உஸ்தாத் - ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர் - ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு பயிற்சி தருவது. காஷ்மீரில் பல தாக்குதலில் உஸ்தாத் ஈடுபட்டுள்ளார்.
4. காலித் (எ) அபு ஆகாஷா - லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி - காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்ட காலித், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தும் வேலையும் ஈடுபட்டவர்
5. முகமது ஹசன்கான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி - காஷ்மீரில் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முகமது ஹசன் மூளையாக செயல்பட்டவர்.






