என் மலர்
இந்தியா

தங்க கடத்தல் வழக்கு: ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம்
- 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
- அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் கைப்பற்றப்பட்டன.
நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Next Story