என் மலர்

  இந்தியா

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
  X
  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி- சோனியா காந்தி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் சிந்தனை அமர்வு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

  அப்போது, கூட்டத்தில் சோனியா காந்தி கூறியதாவது:-

  அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி நடத்தப்படும். இளைஞர்கள் உள்பட அனைவரும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்.

  சமூக, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் உயிர்நாடியை காக்கும் வகையிலும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  என்னைப் போன்ற முதியவர்கள் எளிதாக பங்கேற்க வழிவகை செய்யப்படும். நாம் வெல்வோம். அதுவே நமது உறுதி. அதுவே நமது வலிமை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்.. கட்சியில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி - ராகுல் காந்தி விருப்பம்
  Next Story
  ×