search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    எரிபொருள் விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்வைத்த நிதி மசோதா-2022 மற்றும் ஒதுக்கீடு மசோதா-2022 மீதான விவாதங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி., டி.என். பிரதாபன் 
    ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். 

    இதேபோல் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு நடத்தி வரும்அகில இந்திய வேலைநிறுத்தம் குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி, கேரளா காங்கிரஸ் எம்.பி., கொடிகுன்னில் சுரேஷ் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார்.

    இதேபோல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாநிலங்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விதி 267 ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.சாந்தனு சென் நோட்டீஸ் கொடுத்தள்ளார். 

    இதேபோல் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் குறித்து மாநிலங்களவையில் விதி 267ன் கீழ் விவாதிக்க காங்கிரஸ்.எம்.பி .சக்திசிங் கோஹிலும் நோட்டிஸ் கொடுத்துள்ளார்.

    Next Story
    ×