search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய காங்கிரசார்
    X
    ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய காங்கிரசார்

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும்- நிர்வாகிகள், தொண்டர்கள் முழக்கம்

    காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொண்டர்கள் கட்சி தலைமையகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், சத்தீஸ்கர் முதல்வல் பூபேஷ் பாகல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். தேர்தல் தோல்வி மற்றும் உட்கட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றம் அதேசமயம், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே குவிந்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி முழக்கங்கள் எழுப்பினர். கட்சி தலைமை அலுவலகம் அருகே ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொண்டர்கள் கட்சி தலைமையகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், ராகுல் காந்திதான் பாசிச கட்சிகளையும் மோடியையும் எதிர்க்க முடியும் என்பதால், அவர்தான் கட்சியின் தலைமை பொறுப்பை விரைவில் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். 
    Next Story
    ×