என் மலர்
இந்தியா

ஆளுநரை சந்தித்த பகவந்த் மான்
பஞ்சாப் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பகவந்த் மான், பஞ்சாப் முதல் மந்திரியாக வரும் 16-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியை ஆம் ஆத்மி தோற்கடித்து பஞ்சாபில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதையடுத்து, பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநரிடம் வழங்கினார். சட்டசபையை கலைத்து ஆம் ஆத்மியின் புதிய சட்டசபைக்கு வழி வகுக்குமாறும் பரிந்துரைத்தார்.
இந்நிலையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பகவந்த் மான் இன்று காலை சந்தித்தார். அப்போது பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்.
இதையும் படியுங்கள்...ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Next Story