search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மனீஷ் திவாரி, குலாம்நபி ஆசாத் (கோப்பு படம்)
    X
    மனீஷ் திவாரி, குலாம்நபி ஆசாத் (கோப்பு படம்)

    பஞ்சாப் தேர்தல்- காங்கிரஸ் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து குலாம்நபி ஆசாத், மனீஷ் திவாரி நீக்கம்

    பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் நட்சத்திர பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடக்கிறது.

    117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு வருகிற 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் நட்சத்திர பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

    காங்கிரஸ்

    கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன் சிங், ராகுல்காந்தி, பிரியங்கா, பஞ்சாப் முதல் மந்திரி சரன்ஜித் சிங் சன்னி, மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    முன்னாள் எதிர்க்கட்சி தலை வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் பெயர் பஞ்சாப் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

    இதேபோல மக்களவை எம்.பி.யான மனீஷ் திவாரி பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்துதான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    மனீஷ் திவாரி பஞ்சாபில் தேர்தல் பிரசார பணியில் முழு வீச்சில் ஈடுபடக்கூடியவர். அவரது சமூகத்துக்கான 40 சதவீத ஓட்டுகள் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.

    காங்கிரஸ் தலைமைமீது அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதிய 23 தலைவர்களில் குலாம்நபி ஆசாத்தும், மனீஷ் திவாரியும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படியுங்கள்... டெல்லி பயணம்: மோடி-அமித்ஷாவை கவர்னர் ரவி சந்திக்கிறார்

    Next Story
    ×