search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    பஞ்சாப் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்- இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

    பஞ்சாப்பில் குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல் 16 வரை கடைபிடிக்கப்படுவதால் சீக்கியர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வர்கள். 

    தற்போது, சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சீக்கியர்கள் தங்களின் புனித பயணமான குரு ரவிதாஸ் நினைவிடத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்படலாம். தேர்தலில் வாக்களிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கையும் குறையலாம். 

    இதனால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடிதம் எழுதியுள்ளன.

    இந்நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. 
    Next Story
    ×