என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மேகதாது
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்- மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு
By
மாலை மலர்25 Jun 2021 8:23 AM GMT (Updated: 25 Jun 2021 8:23 AM GMT)

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரை தரவேண்டும் என தமிழக அதிகாரிகள் கூறினர்.
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை ஆணைத்தின் 12வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார்.
தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, அரசு சிறப்பு செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தரவேண்டிய நீரை தரவேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தி அழுத்தம் கொடுத்தனர்.
இதேபோல் மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று திட்டவட்டமாக கூறினர்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் -எடியூரப்பா
கர்நாடக அரசு மேகதாது அணை பிரச்சனையை எழுப்பிய நிலையில், தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×