என் மலர்

  செய்திகள்

  மாயாவதி
  X
  மாயாவதி

  ஏழைகளுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் - மாயாவதி கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியை ஒரு தேசிய கொள்கையாக மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்படுத்தினால் அது சிறப்பாக இருக்கும் என்று பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
  லக்னோ:

  நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளைப் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தருணத்தில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவருமான மாயாவதி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

  அதில் அவர், “கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியை ஒரு தேசிய கொள்கையாக மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்படுத்தினால் அது சிறப்பாக இருக்கும். ஏழைக்குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக போட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

  Next Story
  ×