என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை- மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடுவது சம்பந்தமாக ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதே போல இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் மருந்தை கண்டுபிடித்துள்ளது.
அந்த மருந்தை இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அந்த மருந்தின் 3 கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. அதனால் அதை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. எனவே எந்த நேரத்திலும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுமதி கிடைத்ததும் இந்தியாவில் தடுப்பூசி போடப்படும். இதேபோல வேறு சில மருந்துகளையும் வாங்க இந்தியா முயற்சித்து வருகிறது.
தடுப்பூசி பொது மக்களுக்கு போடுவது சம்பந்தமாக ஒத்திகை நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஒத்திகை பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற உள்ளது.

Next Story