search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    உலகமெங்கும் அமைதி தழைக்கட்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், உலகம் எங்கும் அமைதி தழைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இயேசு பிரான் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உற்சாகப்படுத்தவும் ஒரு சந்தர்ப்பம் ஆகும். இந்த பண்டிகை, உலகமெங்கும் அமைதியை தழைக்கச் செய்யும், மனித குலத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உதவும் என்று நான் நம்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம் மற்றும் மனிதநேயம் பற்றிய போதனைகளை மீண்டும் நமக்குள் பதிய வைப்போம். நமது நாட்டுக்கும், சமூக நலனுக்கும் நம்மை நாம் அர்ப்பணிப்போம். இந்த பண்டிகையில் நாம் மற்றவர்களிடம் அன்பு மற்றும் கனிவால் நம் இதயங்களை ஒளிரச்செய்வோம். கிறிஸ்தவ சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

    மேலும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “உலக மக்களின் சுகாதாரம் மற்றும் நலனுக்காக நாம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம். இந்தப் பண்டிகை நமது வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம், சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×