search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கர்நாடகாவில் கொரோனாவை வென்ற 110 வயது மூதாட்டி

    கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை வென்ற 110 வயது மூதாட்டி பூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
    சித்ரதுர்கா:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் கடந்த 3 மாதங்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் ஜெட்வேகத்தில் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 1.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 2,500 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் கோரமுக கொரோனா வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் தனது கோரப்பிடியில் விழுவைத்து வருகிறது. வயோதிகம், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் வயதானவர்கள் பொது இடங்களில் சுற்றித்திரிய வேண்டாம் என்றும், வீடுகளில் தங்கியிருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா (மாவட்டம்) டவுனை சேர்ந்த 110 வயது மூதாட்டி காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சித்ரதுர்கா மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மூதாட்டி படிப்படியாக கொரோனாவில் இருந்து மீண்டார். இதனால் நேற்று அவர் பூரணமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த மூதாட்டி சித்ரதுர்கா டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் தனது பேரனுடன் சித்ரதுர்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×