என் மலர்
செய்திகள்

ராகுல் காந்தி
பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை? என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி :
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ‘டுவிட்டர்‘ பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலை முறையே லிட்டருக்கு ரூ.69-க்கும், ரூ.62-க்கும் விற்று வரும் அரசு எப்போது இவற்றின் விலைகளை குறைக்கப்போகிறது? உலக அளவில் கச்சா எண்ணெய் விலை எதிர்பாராத அளவில் குறைந்து உள்ள நிலையில் இன்னும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகிறது? இந்த பேரிடர் காலத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து இருப்பது மிகவும் நல்லது. மத்திய அரசு எப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்?
இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜேவாலா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,
“கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துள்ள இந்த நிலையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காமல் மோடி அரசு மவுனமாக இருந்து வருகிறது. மக்கள் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் அதிக விலை கொடுத்து வருகிறார்கள். தங்களை தாங்களே தேசியவாதிகள் என்று அறிவித்துக் கொள்பவர்கள், இப்போது பகுத்தறிவாளர்களாக மாறி விலையை குறைக்க வேண்டும் என்று கேட்பார்களா?“ என்று கூறி உள்ளார்.
காங்கிரசின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான பவன் கேரா தன்னுடைய டுவிட்டர் பதிவில், கச்சா எண்ணெயை இருப்பு வைக்க முடியாத நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் அதன் விலையை பெருமளவில் குறைத்து விற்கும் போது, இங்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பழைய விலைக்கே விற்கப்படுவது எப்படி? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story