search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள போலீஸ்
    X
    கேரள போலீஸ்

    கேரள போலீசாருக்கு புதிய கட்டுப்பாடுகள்

    போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தடியடி நடத்தும் போது கை,கால்களில் மட்டுமே அடிக்க வேண்டும் என கேரள போலீசாருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அடிக்கடி போராட்டங்கள் நடைபெறும்.

    போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைப்பது வழக்கம். இதில் தடியடி நடத்தும் போது போராட்டக்காரர்கள் பலரது மண்டை உடைவதும், முக்கிய உடல் உறுப்புகள் சேதம் அடைவதும் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தன.

    இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் நடத்தும் தடியடியில் மனித உரிமைகளை மீறும் செயலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும் போலீஸ் நிலையங்களில் நடக்கும் லாக்-அப் மரணங்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்று கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் தற்போது போலீசார் கடைபிடிக்கும் தடியடி முறை ஆங்கிலேயர் காலத்து முறை எனவும், அதனை கைவிட்டு புதிய முறையில் தடியடி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டகாரர்களை விரட்ட அவர்களின் தலையில் லத்தியால் அடித்து விரட்டும் முறை இருந்தது. இந்த முறையை கைவிட்டு போராட்டக்காரர்களை புதிய யுக்தியை பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதன்படி இனி கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றால் போலீசார் தடியடி பிரயோகம் செய்யும் போது போராட்டக்காரர்களின் கை, கால், முட்டிகளில் மட்டுமே அடிக்க வேண்டும்.

    தலை, கழுத்து, முகம், அடி வயிறு போன்ற உடல் உறுப்புகளில் எக்காரணம் கொண்டும் தாக்கக்கூடாது. இதற்கான பயிற்சிகள் போலீசாருக்கு அளிக்கப்பட வேண்டும். மாவட்ட வாரியாக போலீசாருக்கு இந்த பயிற்சி கள் அளிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களை கைது செய்யும் போது தான் வன்முறை வெடிக்கிறது. எனவே தலைவர்களை கைது செய்ய புது யுக்திகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது போல குறுகிய சாலைகள், மைதானங்கள், பிரதான சாலைகளில் போராட்டங்கள் நடத்தும் போது போராட் டக்காரர்களை கலைக்கவும், நவீன யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறையை கைவிட்டு நவீன காலத்துக்கு திரும்பவும், புதிய யுக்திகளை பயன்படுத்தி போலீசார் தடியடி நடத்தவும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெகரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×