search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் - ப.சிதம்பரம்
    X

    ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் - ப.சிதம்பரம்

    ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்மாநிலத்தில் தொண்டர்கள் தற்கொலை செய்வார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2-வது முறையாக தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.

    நாடுமுழுவதும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட பிடிக்க முடியாத பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது.

    அதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

    தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும்போது தனது ராஜினாமா முடிவை கூறினார்.


    ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக ஏற்க மறுத்து நிராகரித்தது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் ராகுலின் விலகலை விரும்ப வில்லை. இதனால் ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பேச்சும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    ப.சிதம்பரம் பேசும்போது, ‘ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவில் தொண்டர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள் என கூறினார். இதைக்கேட்டு ராகுல் காந்தி மனவருத்தம் அடைந்து தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதேபோல தலைவர்கள் பலரும் பேசும்போது, வயநாடு தொகுதியில் மக்கள் உங்களுக்கு சாதனை வெற்றியை தந்துள்ளனர். எனவே கட்சி தலைவராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டனர்.

    Next Story
    ×