என் மலர்

  செய்திகள்

  டிடிவி தினகரன் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு
  X

  டிடிவி தினகரன் குரல் மாதிரி பரிசோதனை வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிடிவி தினகரனின் குரல் மாதிரி பரிசோதனை தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran
  புதுடெல்லி:

  இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

  அதன்பின்னர் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி கோரிக்கை வைத்தனர். இதற்காக டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு டி.டி.வி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார்.

  இந்த ஆடியோக்கள்  ஜோடிக்கப்பட்டவை என்று கூறிய டிடிவி தினகரன், தன் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் பரிசோதனை தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

  இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குரல் பரிசோதனை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #TTVDhinakaran
  Next Story
  ×