என் மலர்

  செய்திகள்

  பாஜக எம்எல்ஏக்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல தடை: எடியூரப்பா உத்தரவு
  X

  பாஜக எம்எல்ஏக்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல தடை: எடியூரப்பா உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் வரை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு தடை விதித்து எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். #BJP #Yeddyurappa
  பெங்களூரு :

  கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, தேசிய அமைப்பு துணை செயலாளர் பி.எல்.சந்தோஷ், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாராளுமன்ற தேர்தல் நிலவரம், பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பேசியதாவது:-

  துமகூரு, கலபுரகி, கோலார் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அங்குள்ள கள நிலவரங்களின் அடிப்படையில் இதை சொல்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று இது உண்மை என்று தெரியவரும்.

  சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த (மே) மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நீங்கள் அனைவரும் அந்த தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். இந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மிக முக்கியம்.  அதனால் யாரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம். அவ்வாறு திட்டமிட்டிருந்தால் அதை தவிர்க்க வேண்டும். தேர்தல் முடிவு வெளியான பிறகு நீங்கள் எங்கு வேண்மென்றாலும் செல்லுங்கள்.

  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

  சிஞ்சோலி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ராமச்சந்திர ஜாதவ் வேட்பாளராக நிறுத்தும்படி கர்நாடக தலைவர்கள், மேலிடத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சுனில் வல்யாபுரே கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடியூரப்பா இறங்கியுள்ளார்.

  எம்.எல்.சி. பதவி வழங்குவதாகவும், அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு சுனில் வல்யாபுரே, தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி இருக்கிறார். #BJP #Yeddyurappa

  Next Story
  ×