search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்கும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்
    X

    தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்கும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகல்

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக இன்று கடிதம் கொடுத்துள்ளார். #RanjanGogoi #SupremeCourt #Ramana
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் அவர் பிரமாணப் பத்திரம் அனுப்பி இருந்தார்.

    தன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை அடைந்தார். இதை அவர் முற்றிலும் மறுத்தார்.

    தலைமை நீதிபதி மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 3 நீதிபதிகள் குழு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு நாளை இது பற்றி விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவில் இருந்து நீதிபதி ரமணா இன்று விலகியுள்ளார்.  அவர் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எனது நெருங்கிய நண்பர். அவர் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர். அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன் என ரமணா குறிப்பிட்டுள்ளார். #RanjanGogoi #SupremeCourt #Ramana
    Next Story
    ×