என் மலர்
செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - அகமதாபாத்தில் வாக்களித்தனர் அத்வானி, அருண் ஜெட்லி
பாராளுமன்ற தேர்தலின் மூன்றாவது கட்டத்தில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, அருண் ஜெட்லி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 #Modi #LKAdvani #ArunJaitley
அகமதாபாத்:
பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஷான்பூர் ஹிந்தி பள்ளியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியும், நிதி மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான அருண் ஜெட்லியும் தங்கள் வாக்குகளை பதிவுசெய்தனர். #LokSabhaElections2019 #Modi #LKAdvani #ArunJaitley
Next Story






