search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் மூத்த தலைவர் காங்கிரசில் இருந்து விலகல்
    X

    தெலுங்கானாவில் மூத்த தலைவர் காங்கிரசில் இருந்து விலகல்

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதாகர் ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். #Seniorleader #Congressleader #SudhakarReddyquits
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சுதாகர் ரெட்டி அக்கட்சியில் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவராக முன்னர் நியமிக்கப்பட்டார்.

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை தலைவராக முன்னர் இவர் பதவி வகித்தார். தெலுங்கானா மாநில சட்டசபையில் மேல்சபை உறுப்பினராகவும் இருந்த இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளதாகவும் சுதாகர் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார்.



    கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று தற்போது குற்றம்சாட்டும் சுதாகர் ரெட்டி விரைவில் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் செய்யவுள்ள நிலையில் சுதாகர் ரெட்டியின் ராஜினாமா அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கானா ராஷ்டரிய சமிதியில் இணைந்தது நினைவிருக்கலாம். #Seniorleader #Congressleader #SudhakarReddyquits
    Next Story
    ×