என் மலர்

  செய்திகள்

  தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு
  X

  தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆர்.சி.குனிதா கூறியுள்ளார். #Congress #LokSabha #Telangana
  ஐதராபாத்:

  தெலுங்கானாவில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்டு, தெலுங்குதேசம், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தெலுங்கானா மாநில பொறுப்பாளர் ஆர்.சி.குனிதா நிருபர்களிடம் கூறும்போது,

  பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்து உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைவர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்குதேசம், கம்யூனிஸ்டு மற்றும் தெலுங்கான ஜன சமிதி ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார். தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.  #Congress #LokSabha #Telangana 
  Next Story
  ×