என் மலர்

  செய்திகள்

  மோடியுடன் ராகுல், பிரியங்காவை ஒப்பிட முடியாது: சிவசேனா
  X

  மோடியுடன் ராகுல், பிரியங்காவை ஒப்பிட முடியாது: சிவசேனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடியின் தலைமையுடன் ராகுல் காந்தியையோ, பிரியங்காவையோ ஒப்பிட முடியாது என சிவசேனா கூறுகிறது. #ShivSena #PMModi
  மும்பை :

  மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதிலும் எதிர்க்கட்சிகளையும் மிஞ்சி, பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சிவசேனா வசைபாடி வந்தது. பா.ஜனதாவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்று சிவசேனா தலைவர் அறிவித்தார்.

  ஆனால் திடீர் திருப்பமாக கடந்த திங்கட்கிழமை பா.ஜனதாவுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமின்றி, மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கும் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

  கூட்டணி உருவான நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு பிரதமர் மோடியை சிவசேனா கட்சி புகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

  பாராளுமன்ற தேர்தலில் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இடையேதான் அதிக கேள்விகள் எழுந்து இருக்கின்றன. எங்கள் கூட்டணியால் பூச்சிகள் போன்ற எதிர்க்கட்சிகள் நசுக்கப்படும்.  2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல்காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. பிரியங்காவும் உதவியாக இருக்கிறார். ஆனால், இருவரையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.

  கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே கருத்துவேறுபாடுகள் எழுந்த நிலையில் ஏன் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்? ராமர் கோவில் கட்டப்படுமா?, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரப்படுமா? என்பவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த கேள்விக்கான பதில், மராட்டியத்தின் நலனுக்காகவே கூட்டணி முடிவை சிவசேனா எடுத்து உள்ளது.

  சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்தவிதமான பகைமையும் இல்லை. பீகார் முதல்-மந்திரி நிதி‌ஷ் குமாருக்கு பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும்கூட, அதையெல்லாம் மறந்து அவர் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர முடியும், காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முடியும் என்கிறபோது, சிவசேனா எப்போதும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கமாக இருக்கும்.

  கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பலையும், மோடிக்கு ஆதரவான அலையும் காணப்பட்டது. ஆனால், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அலையின் அடிப்படையில் போட்டி இருக்காது. ஆனால் கொள்கைகள், வளர்ச்சிப்பணிகள், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி இருக்கும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ShivSena #PMModi
  Next Story
  ×