என் மலர்
செய்திகள்

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria
புதுடெல்லி:
புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரை நேரில் வரவழைத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலான சில ஆதாரங்களை முன்வைத்து இந்த பிரச்சனையை மையப்படுத்தி இந்திய தூதரகத்தின் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria

இந்நிலையில், நேற்றைய தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதர் அஜய் பிசாரியா-வை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story