என் மலர்

  செய்திகள்

  தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிகளுக்கு ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம் - வீடியோ
  X

  தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிகளுக்கு ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம் - வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானா மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற காதல் ஜோடிகளுக்கு டாக்டர் உதவியால் ஆஸ்பத்திரியில் திருமணம் நடந்த வீடியோ வைரலாகியது. #Telanganalovers #MarriedinHospital
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(21). தனது உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா(19) என்பவரை நவாஸ் உயிருக்குயிராக காதலித்து வந்தார். இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்த காதல் உறவுக்கு இருவரின் குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  ஏற்கனவே, நவாசின் சகோதரருக்கு ரேஷ்மாவின் அக்காவை திருமணம் செய்து கொடுத்துள்ளதால் அதே குடும்பத்தில் மீண்டும் ஒரு சம்பந்தம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

  இதற்கிடையில், பெற்றோர் தனக்கு மாப்பிள்ளை தேடுவதை அறிந்த ரேஷ்மா சமீபத்தில் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விகாராபாத் நகரில் உள்ள கிராஃபோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  காதலிக்கு நேர்ந்த இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாத ரியாஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் தற்கொலைக்கு முயன்றார். ரேஷ்மா அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையில், ரேஷ்மாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவினாஷ், அவரது விபரீத முடிவுக்கான காரணம் தொடர்பாக அக்கறையுடன் விசாரித்தார். ரியாஸ் காதல் விவகாரம் பற்றி தெரியவந்த டாக்டர் இரு குடும்பத்தாரையும் அழைத்து சமரசம் பேசினார்.

  உங்களது பிடிவாதத்தால் இரு உயிர்கள் பலியாக வேண்டுமா? அவர்கள் மீண்டும் தற்கொலைக்கு முயன்றால் என்னவாகும்? என்று சிந்தித்துப் பாருங்கள் என்று அவர் கூறிய அறிவுரை கைமேல் பலனைத் தந்தது. அதுவும் உடனடியாக.

  இதையடுத்து, அந்த மருத்துவமனையில் மூக்கில் சுவாசக் குழாயுடன் இருந்த ரேஷ்மாவுக்கு  மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் மணமகன் கோலத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.

  இருவீட்டார் முன்னிலையில் மதகுருவின் தலைமையில் மணமகளுக்கு ‘மஹர்’ பணம் மற்றும் தங்க நகைகளை தந்து நவாஸ் குடும்பத்தார் ரேஷ்மாவை மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.

  இந்த சம்பவம் தொடர்பான செய்திகளும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Telanganalovers #MarriedinHospital
  Next Story
  ×