என் மலர்

  செய்திகள்

  உ.பி. தேர்தல் கூட்டணி: காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு- ராகுல் எச்சரிக்கை
  X

  உ.பி. தேர்தல் கூட்டணி: காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு- ராகுல் எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். #rahulgandhi #UPElectionCoalition

  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.

  இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்தன.

  காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டன. சோனியா, ராகுலுக்கான ரேபரேலி, அமேதி தொகுதியை ஒதுக்கி அதில் தாங்கள் போட்டியிட மாட்டோம் என்று தெரிவித்தன.

  அகிலேஷ் யாதவ்- மாயாவதியின் இந்த முடிவால் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

  இந்த நிலையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எச்சரித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட்டது தவறு என்று கூறியுள்ளார். துபாய் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

  நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஊடகங்களில் சில அறிக்கைகள் கேள்விப்பட்டேன். ஆனாலும் நாங்கள் ஒருங்கிணைந்து பிரதமர் மோடியை தோற்கடிப்போம் என்பது உறுதியாகும்.


  உத்தரபிரதேசத்தில் காங்கிரசை குறைத்து மதிப்பிட்டது மிகப்பெரிய தவறாகும் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

  சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜனதாவை தோற்கடிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடந்த கால அனுபவத்தை வைத்து இதை நாங்கள் சொல்கிறோம்.

  மாறாக காங்கிரசின் தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் பா.ஜனதா வாக்குகளை பங்கிட்டு விடுகிறது. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாம்.

  பிரதமர் மோடியை வீழ்த்துவதே எங்களது முதல் இலக்காகும். சில மாநிலங்களில் நாங்கள் பலம் பெற்று முதன்மை கட்சியாக இருக்கிறோம். பா.ஜனதாவை நேரடியாக எதிர்க்கிறோம்.

  மராட்டியம், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். பல்வேறு மாநிலங்களில் கூட்டணிகளை ஒருங்கிணைப்போம் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

  இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

  சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. #rahulgandhi #UPElectionCoalition

  Next Story
  ×