என் மலர்
செய்திகள்

பாராளுமன்றத்தில் மேலும் 3 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்டு
பாராளுமன்ற மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று உத்தரவிட்டுள்ளார். #Parliament #ADMKMPs #MekedatuDam
புதுடெல்லி:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.
பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

அவையை சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். வேணுகோபால், செங்குட்டுவன், ராமசந்திரன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.பி. களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
இதுவரை மக்களவையில் 34 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். #Parliament #ADMKMPs
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.
பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை இன்று கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி முழக்கமிட்டனர்.

Next Story