என் மலர்

  செய்திகள்

  94-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி, அமித் ஷா மரியாதை
  X

  94-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி, அமித் ஷா மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #Modi #AtalBihariVajpayee
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

  இந்நிலையில், வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


  நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

  இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. #VajpayeeBirthday #Modi #AtalBihariVajpayee 
  Next Story
  ×