என் மலர்

  செய்திகள்

  தலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
  X

  தலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிதி மோசடி செய்த தலைமறைவு குற்றவாளியாக தன்னை அறிவித்த நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரிய விஜய் மல்லையாவின் மனுவின் பேரில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. #SCnotice #VijayMallya
  புதுடெல்லி:

  பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா(62) வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். தற்போது லண்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.

  இந்நிலையில், நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.

  கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது. மக்களின் பணத்தில் இருந்து வங்கி கடனில் அசல் தொகையை முழுவதுமாக செலுத்த நான் இப்போதும் தயாராகவே இருக்கிறேன் என சமீபத்தில் விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.

  இதற்கிடையில், தன்னை நிதி மோசடி செய்த தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்ககோரி மும்பை ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

  இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் இன்று விசாரணை நடத்தினர்.  மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விஜய் மல்லையாவின் கோரிக்கையின்படி மும்பை சிறப்பு நீதிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. #SCnotice #EDnotice #Mallya #VijayMallya 
  Next Story
  ×