search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலைக்கு பெண்கள் வர மாவோயிஸ்டுகள் ஆதரவு
    X

    சபரிமலைக்கு பெண்கள் வர மாவோயிஸ்டுகள் ஆதரவு

    சபரிமலைக்கு பெண்கள் வர ஆதரவு தெரிவித்து பலத்த கண்காணிப்பையும் மீறி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் புகுந்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maoist #SabarimalaTemple
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு அட்டப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.

    கடந்த 5-ந்தேதி அட்டபாடிபுதூர் என்ற இடத்தில் சுற்றித்திரிந்த கோவை புலியகுளத்தை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் டேனியஸ் (வயது 30) என்பவரை அகழி போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து தமிழக கியூ பிரிவு போலீசார், கேரள தண்டர் போல்டு போலீசார் தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அட்டப்பாடி பகுதியில் உள்ள ஜெல்லிப்பாறை, தென்மலை ஆகிய ஊர்களில் அரசு அலுவலகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

    அதில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். யூ.ஏ.பி.ஏ. சட்டத்தை திருத்த வேண்டும். மாவோயிஸ்டுகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மாவோயிஸ்டுகளை அரசியல்வாதிகளாக கருத வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    பலத்த கண்காணிப்பையும் மீறி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் புகுந்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை அட்டப்பாடியில் மாவோயிஸ்டுகள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் சபரிமலைக்கு வர பெண்களை தடுப்பவர்களுக்கு எதிராக போராடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து அட்டப்பாடி மற்றும் அகழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Maoist #SabarimalaTemple

    Next Story
    ×